சந்திரயான்-2 வெற்றி: விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்க வேண்டும் - நாராயணசாமி வலியுறுத்தல்
சந்திரயான்-2 செயற்கை கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து இதற்காக பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் சந்திரயான்-2 வெற்றிகரமாக செலுத்தப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்கு முதலில் அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுந்து பாராட்டி பேசினார்.
தொடர்ந்து பேசிய சாமிநாதன் எம்.எல்.ஏ., சந்திரயான்-2 முழுக்க முழுக்க இந்திய விஞ்ஞானிகளின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும் பயன்படக்கூடியது. புதுவை மாணவர்கள் விஞ்ஞானிகளாக உருவாக இளம் விஞ்ஞானிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டும் என்றார்.
தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
இந்திய விஞ்ஞானிகள் சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவி உள்ளனர். அது புவிவட்ட பாதைக்கு சென்றுள்ளது. நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்ய உள்ளது. 7 வருடங்களுக்கு முன்பு ரஷியாவிடமிருந்து கிரயோஜெனிக் என்ஜின்களை நாம் பெற்றோம். இப்போது அவர்கள் தராததால் நமது விஞ்ஞானிகளே முயற்சி செய்து கிரயோஜெனிக் என்ஜின்களை தயாரித்து செலுத்தி உள்ளனர்.
ஹீலியம்தான் அதன் எரிபொருளாக உள்ளது. செப்டம்பர் மாதம் 6 அல்லது 7-ந்தேதி ரோவர் எந்திரம் நிலவில் இறங்கி படம் எடுத்து அனுப்பும். அமெரிக்கா, ரஷியாவை அடுத்து விண்வெளியில் 3-வதாக நாம் சாதனை படைத்துள்ளோம். ஒரு தமிழரை தலைவராக கொண்டு இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்காக பாராட்டு தெரிவித்துக்கொள்கிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கவேண்டும் என்று சட்டமன்றம் பரிந்துரை செய்கிறது.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.