மகளிர் சுயசார்பு இயக்க மாநில மாநாடு: உரிமைகளை பாதுகாக்க, கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வு தேவை - நடிகை ரோகிணி பேச்சு
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக கிராமப்புற பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நடிகை ரோகிணி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் மாநில மாநாடு நவீனா கார்டன் திருமண நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ‘பெண் உரிமையை பாதுகாப்போம்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடந்தது. இயக்கத்தின் ஆலோசகர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணை தலைவரும், நடிகையுமான ரோகிணி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பெண்களின் வளர்ச்சியில் சமூக வலைதளம் பல்வேறு வகைகளில் உதவுகிறது. இது பெண்களுக்கு நல்ல வாய்ப்பாக உள்ளது. பெண்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. குறிப்பாக மலைவாழ் மக்களின் பிரச்சினைகளை வெளியே கொண்டு வந்து, தீர்வு காணப்பட்டுள்ளது. நாகரிக உலகில் பெண்கள் மாற்றத்திற்கு தயாராக இருக்க வேண்டும். எப்போதும் வேலை, வேலை என்று இருக்கும் பெண்கள் பொழுதுபோக்கிற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்கள் இசைகளை கேட்க வேண்டும். நடனமும் ஆடலாம். இதன் மூலம் மனதிற்கும், உடலுக்கும் உற்சாகம் கிடைக்கும்.
பெண்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக கிராமப்புறத்தில் வசிக்கும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். நாகரிக உலகத்திற்கு ஏற்ப தங்கள் உடைகளையும் மாற்றிக்கொள்ளலாம். மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் கூட்டாக ஒன்று சேர்ந்து குடிநீர் பிரச்சினை, மின்சாரம் போன்ற அடிப்படை சமூக பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தி வெற்றி பெறுவதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் வாழ்வில் மேலும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினர். அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கவர், டீ கப் போன்றவற்றிற்கு புதுவையில் தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான மாற்று நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம்பிரித்து மக்கள் வழங்கினால் மக்கும் குப்பைகளை உரமாக்கி அதனை விவசாயிகளுக்கு வழங்க முடியும். இதற்கான திட்டத்தை தொடங்க நிதி ஒதுக்கியுள்ளோம். இதன் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மாடித்தோட்டத்தில் காய்கறி மற்றும் பூச்செடி வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்துவோருக்கு மானியம் வழங்க திட்டமிட்டுள்ளோம். வீடுகளில் சோலார் பேனல் பொருத்துவோருக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். இதன் மூலம் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தை வீடுகளுக்கு பயன்படுத்தியது போக மீதியை அரசுக்கு விற்பனை செய்யலாம். இது போன்ற பல்வேறு திட்டங்களை கொண்டு வர உள்ளோம். அதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கடந்த ஆட்சியில் 100 பேருக்கு வேலை உள்ள இடத்தில் 500 பேரை பணியமர்த்தி உள்ளனர். இதனால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புதுவையில் உள்ள நிதிநிலையில் அனைவருக்கும் அரசு வேலை வழங்குவது சிரமம். எனவே மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அதனை பெண்கள் தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.