உல்லாஸ்நகரில் பயங்கரம் சிவசேனா கவுன்சிலர் மகள் அரிவாளால் வெட்டி கொலை கணவர் கைது
உல்லாஸ்நகரில் சிவசேனா கவுன்சிலர் மகளை அரிவாளால் வெட்டி கொலை செய்த அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பர்நாத்,
தானே உல்லாஸ்நகரில் உள்ள ஹஜிமலாங்க் வாடி பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரா பாட்டீல் (வயது 43). இவரது மனைவி வைஷாலி (32). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். வைஷாலி கல்யாண் டோம்பிவிலி மாநகராட்சி சிவசேனா கவுன்சிலர் விமல் போயரின் மகள் ஆவார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கணவர், மனைவி இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரா பாட்டீல் மனைவி என்றும் பார்க்காமல் வைஷாலியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கணவரை தேடி வந்தனர்.
கவுன்சிலர் மகள் கொல்லப்பட்ட சம்பவத்தால் நேற்று முன்தினம் உல்லாஸ்நகர் பகுதியில் சிவசேனா கட்சியினர் அதிகளவில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வந்தது.
இந்தநிலையில் நேற்று ராஜேந்திரா பாட்டீலை போலீசார் கைது செய்தனர். போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்ற னர்.