கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பிரியங்காகாந்தியை கைது செய்ததை கண்டித்து கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-07-20 23:00 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில், உத்தரபிரதேச மாநிலத்தில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தியை கைது செய்ததைத் கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்டத் தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். வட்டத்தலைவர்கள் பன்னீர்செல்வம், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் வின்சென்ட் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காகாந்தி கைதை கண்டித்தும், பா.ஜனதா அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் காசிலிங்கம், அக.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவு ஆறுமுக சுப்பிரமணி, சிறுபான்மைத் துறை ஷபி அகமது, ஜாவித், வர்த்தகப் பிரிவு முபாரக், மனித உரிமை தலைவர் லலித் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கோஷங்கள் எழுப்பினர். இதில், வட்டாரத் தலைவர்கள் விவேகானந்தன், ஜெயவேல், ராமன், ஊத்தங்கரை நகர தலைவர் விஜயகுமார், சேர்மேன் பூபதி, முன்னாள் கவுன்சிலர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில், மாவட்டத் துணைத்தலைவர் யுவராஜ் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்