அ.தி.மு.க. கொடியேற்று விழா

ஊரப்பாக்கம் ஊராட்சிகளில் அ.தி.மு.க. கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2019-07-19 22:00 GMT
வண்டலூர்,

காஞ்சீபுரம் மத்திய மாவட்டம் காட்டாங் கொளத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவையொட்டி மண்ணிவாக்கம், வண்டலூர், நெடுங்குன்றம், கொளப்பாக்கம், ரத்தினமங்கலம், கண்டிகை, அஸ்தினாபுரம், காயரம்பேடு, காரணைப்புதுச்சேரி, ஊரப்பாக்கம் ஊராட்சிகளில் அ.தி.மு.க. கொடியேற்று விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சிங்கை கவுஸ்பாஷா தலைமை தாங்கினார். காஞ்சீபுரம் மத்திய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், முன்னாள் எம்.பி.க்கள் மரகதம் குமரவேல், கே.என்.ராமச்சந்திரன், மாநில அமைப்பு சாரா அணி செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கலந்துகொண்டு 10 ஊராட்சிகளிலும் 70 அடி உயர கொடி கம்பத்தில் அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளையும், ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூர் செயலாளர் டி.சீனிவாசன், மறைமலைநகர் முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.ஜி.கே.கோபிகண்ணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அஞ்சூர் தேவராஜ், மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.டி.பிரசாத், ஒன்றிய மாணவரணி செயலாளர் காட்டூர் கன்னியப்பன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் காயரம்பேடு ஜி.திருவாக்கு, வேங்கடமங்கலம் டி.ரவி, குமிழி ஜான்சன், ஊராட்சி செயலாளர்கள் துளசிங்கம், நெடுங்குன்றம் எம்.ரங்கன், பி.கண்ணப்பன், காரணை பி.சண்முகம், ஊரப்பாக்கம் பேரவை செயலாளர் கபில், ஓட்டேரி ரபீக் மற்றும் ஒன்றிய, மாவட்ட, கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக காஞ்சீபுரம் மத்திய மாவட்ட எல்லையான வண்டலூர் இரணியம்மன் கோவிலில் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமிக்கு காஞ்சீபுரம் மத்திய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்