பரமத்தி அருகே சூதாடிய 5 பேர் கைது ரூ.1 லட்சம் பறிமுதல்

பரமத்தி அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரு.1 லட்சம் பறி முதல் செய்யப்பட்டது.

Update: 2019-07-19 22:00 GMT
பரமத்தி வேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக பரமத்தி வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமிக்கு தகவல் கிடைத்தது.

இது குறித்து நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் பரமத்தி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பள்ளாபாளையம் காக்காயன் தோட்டம் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில் அவர்கள் பள்ளாபாளையத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 40), பரமத்தி வேலூர் கிழக்கு தெருவை சேர்ந்த சுந்தரம் (37), அம்மாசிபாளையத்தை சேர்ந்த சேகர் (39), ரகு (32), சேளூர் செல்லப்பம்பாளையத்தை சேர்ந்த ஆண்டவன் (41) ஆகியோர் என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்து 800 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய பெரியசாமி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்