மதகொண்டப்பள்ளியில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை

மதகொண்டப்பள்ளியில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-07-19 22:45 GMT
தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா மதகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் விஸ்மயா (வயது 16). இவள் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். மாணவியை நன்றாக படிக்குமாறு அவரது பெற்றோர் கூறியதால் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாணவி நேற்று வீட்டில் தனியாக இருந்த போது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் கருகிய மாணவி பரிதாபமாக உயிர் இழந்தார். இது குறித்து தளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்