ராஜினாமா முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் அதிருப்தி எம்.எல்.ஏ. சோமசேகர் வீடியோவில் பேச்சு
ராமலிங்கரெட்டி போல் பின் வாங்க மாட்டோம் என்றும், ராஜினாமா முடிவில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் அதிருப்தி எம்.எல்.ஏ. சோமசேகர் வீடியோவில் பேசி வெளியிட்டுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கூட்டணி அரசில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராமலிங்கரெட்டி, சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா உள்பட 13 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதுதவிர ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த எச்.விஸ்வநாத், கோபாலய்யா, நாராயணகவுடா ஆகிய 3 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். இவர்களில் சோமசேகர், பைரதி பசவராஜ், முனிரத்னா, எச்.விஸ்வநாத் உள்பட 12 எம்.எல்.ஏ.க்கள் மும்பையில் உள்ள ஓட்டலில் தங்கி உள்ளனர்.
ராஜினாமா செய்தவர்களில் ராமலிங்கரெட்டி தவிர மற்ற 15 எம்.எல்.ஏ.க்களும் ராஜினாமாவை அங்கீகரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சென்றனர். சுப்ரீம் கோர்ட்டிலும் 15 எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதற்கிடையே, ராஜினாமா முடிவில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று கூறி வந்த ராமலிங்கரெட்டி திடீரென்று பல்டி அடித்தார். அதாவது ராஜினாமாவை திரும்ப பெற உள்ளதாகவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள சட்டசபைக்கு செல்வதாகவும் ராமலிங்கரெட்டி அறிவித்தார்.
இதனால் ராமலிங்கரெட்டியின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான சோமசேகர், முனிரத்னா, பைரதி பசவராஜ் ஆகியோர் தங்களது ராஜினாமாவை திரும்ப பெறுவார்கள் என்ற தகவல் வெளியானது. ஏனெனில் ராஜினாமா விவகாரத்தில் ராமலிங்கரெட்டி எடுக்கும் முடிவே இறுதியானது, அவர் கூறுவதை கேட்டு நடப்போம் என்று 3 எம்.எல்.ஏ.க்களும் சொல்லி வந்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் சோமசேகர் உள்பட 3 பேரும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ராமலிங்கரெட்டி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த விவகாரத்தில் இருந்து பின்வாங்கி விட்டதாகவும், ராஜினாமாவை திரும்ப பெறவும், நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இருப்பதாகவும் பேசி இருப்பதை பார்த்தோம். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யும் முன்பாக ராமலிங்கரெட்டியை சந்தித்து நாங்கள் 3 பேரும் ஆலோசனை நடத்தினோம். ராஜினாமா செய்த பின்பு, அந்த முடிவில் இருந்து 4 பேரும் பின்வாங்க கூடாது என்று ஒப்பந்தம் செய்து கொண்டோம். அதன்படியே, ராமலிங்கரெட்டியுடன் சேர்ந்து நாங்கள் 3 பேரும் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தோம்.
ஒருமுறை ராஜினாமா செய்துவிட்டால் அந்த முடிவில் இருந்து பின்வாங்க கூடாது என்று 4 பேரும் முடிவு எடுத்திருந்தோம். இதுநாள் வரை ராஜினாமா முடிவில் இருந்து 100 சதவீதம் பின்வாங்க மாட்டேன் என்று ராமலிங்கரெட்டி கூறி வந்தார். தற்போது ராஜினாமாவை திரும்ப பெறுவதாக ராமலிங்கரெட்டி அறிவித்துள்ளார். ஆனால் ராஜினாமா விவகாரத்தில் ராமலிங்கரெட்டி போல் பின்வாங்க மாட்டோம். ராஜினாமா முடிவில் இருந்து நாங்கள் 3 பேரும் உறுதியாக இருக்கிறோம். இவ்வாறு சோமசேகர் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

இதற்கிடையே, சோமசேகர், முனிரத்னா, பைரதி பசவராஜ் ஆகிய 3 பேரும் ஒன்றாக அமர்ந்திருப்பது மற்றும் சோமசேகர் எம்.எல்.ஏ. மட்டும் பேசும் வீடியோவை நேற்று காலையில் வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவில் சோமசேகர் எம்.எல்.ஏ. பேசியதாவது:-