39 வருவாய் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 39 வருவாய் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2019-07-17 21:45 GMT
நெல்லை, 

புளியங்குடி முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாக்கியலட்சுமி, சிவகிரி தாலுகா கூடலூருக்கும், தென்காசி வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம், கல்லூரணிக்கும், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் பொற்செல்வி, நாங்குநேரி தாலுகா பூலத்துக்கும், சங்கரன்கோவில் வருவாய் ஆய்வாளர் கோமதி, திருவேங்கடம் தாலுகா அ.கரிசல்குளத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

தென்காசி முதுநிலை வருவாய் ஆய்வாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) வீரலட்சுமி, வீரகேரளம்புதூர் குறுவட்டத்துக்கும், திசையன்விளை வருவாய் ஆய்வாளர் (தேர்தல் பிரிவு) சிவக்குமார், ராதாபுரம் குறுவட்டத்துக்கும், நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலக வருவாய் ஆய்வாளர் செல்லத்துரைச்சி, குருக்கள்பட்டி குறுவட்டத்துக்கும், நாங்குநேரி நதிநீர் இணைப்பு திட்ட அலகு-4 தனி வருவாய் ஆய்வாளர் ஹெலன்மேரி, வன்னிக்கோனேந்தல் குறுவட்டத்துக்கும், திருவேங்கடம் வருவாய் ஆய்வாளர் முருகலட்சுமி, பழங்கோட்டைக்கும், வீரகேரளம்புதூர் வருவாய் ஆய்வாளர் வானமாமலை, மூலக்கரைப்பட்டிக்கும், திருவேங்கடம் வருவாய் ஆய்வாளர் மாரியப்பன், நாங்குநேரிக்கும் மாற்றப்பட்டு இருக்கிறார்கள்.

தென்காசி தாலுகா கல்லூரணி வருவாய் ஆய்வாளர் கனகலட்சுமி, வள்ளியூர் குறுவட்டத்துக்கும், கூடலூர் வருவாய் ஆய்வாளர் மாலதி, ஆலங்குளம் புதுப்பட்டிக்கும், வன்னிக்கோனேந்தல் வருவாய் ஆய்வாளர் மஞ்சுளா, திருவேங்கடத்துக்கும், பாளையங்கோட்டை வருவாய் ஆய்வாளர் ராஜ், சங்கரன்கோவிலுக்கும், மூலக்கரைப்பட்டி வருவாய் ஆய்வாளர் அய்யப்பன், பாளையங்கோட்டைக்கும், சங்கரன்கோவில் வருவாய் ஆய்வாளர் ஆனந்த், சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்துக்கும், குருக்கள்பட்டி வருவாய் ஆய்வாளர் சங்கரவேலு, தென்காசி உதவி கோட்ட அலுவலகத்துக்கும், அ.கரிசல்குளம் வருவாய் ஆய்வாளர் மனோகரன், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

பழங்கோட்டை வருவாய் ஆய்வாளர் ராமசாமி, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், நாங்குநேரி வருவாய் ஆய்வாளர் செல்லப்பொண்ணு, நாங்குநேரி நதிநீர் இணைப்பு திட்ட அலகு-4 தனி வருவாய் ஆய்வாளராகவும், பூலம் வருவாய் ஆய்வாளர் புஷ்பலதா, பாளையங்கோட்டைக்கும், ராதாபுரம் வருவாய் ஆய்வாளர் மாடசாமி, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும், வள்ளியூர் வருவாய் ஆய்வாளர் ஆனந்தசெல்வி, நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின அலுவலகத்துக்கும், புதுப்பட்டி வருவாய் ஆய்வாளர் மார்டின் ராஜா, அம்பைக்கும், பாளையங்கோட்டை வருவாய் ஆய்வாளர் தீபா, நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் கருத்தப்பாண்டியன், சிவகிரி (செங்கோட்டை- திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம் அலகு-6) தனி வருவாய் அலுவலராகவும், சிவகிரி தனி வருவாய் ஆய்வாளர் சங்கரன், தென்காசி கோட்ட கலால் அலுவலக தனி வருவாய் ஆய்வாளராகவும், தென்காசி கோட்ட கலால் வருவாய் ஆய்வாளர் கமலா, புளியங்குடிக்கும், ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர் சேகர், தென்காசி கோட்ட கலால் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அம்பை வருவாய் ஆய்வாளர் சுந்தரலட்சுமி, ஆலங்குளத்துக்கும், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் சுப்பாராஜ், திருவேங்கடத்துக்கும், வீரகேரளம்புதூர் வருவாய் ஆய்வாளர் (தேர்தல் பிரிவு) மீனாட்சி, தென்காசிக்கும், சங்கரன்கோவில் வருவாய் ஆய்வாளர் வசந்தா, வீரகேரளம்புதூருக்கும், தென்காசி உதவி கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் பெர்சியாள் தென்காசிக்கும், சேரன்மாதேவி வருவாய் ஆய்வாளர் ரவி கிருஷ்ணன், தென்காசிக்கும் (திருமங்கலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க திட்டம்-8) மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

தென்காசி வருவாய் ஆய்வாளர் மகேந்திரன் என்ற மாரியப்பன் தென்காசி நில எடுப்பு அலுவலகத்துக்கும், தென்காசி வருவாய் ஆய்வாளர் சுடலைமுத்து, தென்காசி தாலுகா அலுவலகத்துக்கும், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வருவாய் ஆய்வாளர் லிடியா நான்சி, பாளையங்கோட்டைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் மொத்தம் 39 வருவாய் ஆய்வாளர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்