வானவில் : பன்முக செயல்பாடுகளைக் கொண்ட எம் 100 வயர்லெஸ் மவுஸ்
ராபூ நிறுவனம் எம் 100 என்ற பெயரிலான புதிய ரக மவுஸை அறிமுகம் செய்துள்ளது. இது வயர்லெஸ் மவுஸாகும். இது சத்தமின்றி செயல்படும்.
மவுஸை கிளிக் செய்யும் சத்தம் கூட கேட்காது. கையடக்கமாக வடிவமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படும் வகையில் இதன் ஸ்க்ரால் சக்கரம் உள்ளது. இதில் ஒரே சமயத்தில் மூன்று சாதனங்களை இணைத்து செயல்படுத்த முடியும். பன்முக செயல்பாட்டுக்கு ஏற்றது. இதில் புளூடூத் 3.0 இணைப்பு வசதி உள்ளது.
இதனால் வயர் இணைப்பு தேவை இல்லை. இதில் 1300 டி.பி.ஐ. டிராக்கிங் வசதி இருப்பதால், இது மிக வேகமாக செயல்படும். இதில் உள்ள பந்து உருண்டை சிக்காமல் செயல்படும். இதில் உள்ள பேட்டரி காரணமாக 9 மாதங்கள் செயல்படும். வழக்கமான கருப்பு நிற மவுஸை பார்த்து சலித்துப் போனவர்களுக்கு உயரிய செயல்பாடுடன் கூடியதாக 5 வண்ணங்களில் இது வெளிவந்துள்ளது.