வானவில் : மாஸரெட்டி லெவான்டே டிரோபியோ
இத்தாலியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான மாஸரெட்டி நிறுவனம் இந்தியாவில் தனது லெவான்டே மாடல் காரை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே மாஸரெட்டி நிறுனத்தின் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் விற்பனையாகிறது. ஆனால் அது டீசல் என்ஜினாகும். தற்போது லெவான்டே டிராபியோ எனும் பெட்ரோல் மாடலை அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிறுவனம் தயாரித்துள்ள கார்களில் அதிவிரைவு என்ஜினைக் கொண்டது டிராபியோ. இது 3.9 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொடும். இதில் மணிக்கு 325 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். முந்தைய மாடலைக் காட்டிலும் இதில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்தக் காரில் எடை ஒரே சீராக பரவும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த எஸ்.யு.வி. மாடல் காரில் பொழுது போக்கு அம்சங்களுக்கும் குறைவில்லை. 17 ஸ்பீக்கர்கள் உள்ளன. ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இயங்குதளத்தில் செயல்படக் கூடியது. இதன் ஆரம்ப விலை ரூ.1.54 கோடியாகும்.