வேளாங்கண்ணி ஆலய திருவிழா மும்பையில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் முன்பதிவு தொடங்கியது

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவுக்கு மும்பையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கியது.

Update: 2019-07-14 23:00 GMT
மும்பை,

வேளாங்கண்ணி ஆலய திருவிழாவுக்கு மும்பையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு கட்டண ரெயிலுக்கு முன்பதிவு தொடங்கியது.

சிறப்பு கட்டண ரெயில்

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழா அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவுக்கு மும்பையில் இருந்து பக்தர்கள் செல்ல வசதியாக சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில் (வண்டிஎண்:01031) அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 26-ந் தேதி அதிகாலை 12.05 மணிக்கு மும்பை லோக்மான்யா திலக் டெர்மினசில் இருந்து புறப்படும்.

மறுநாள் இரவு 7 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கியது.

நின்று செல்லும் இடங்கள்

இதே ரெயில் மறுமார்க்கமாக (01032) அடுத்த மாதம் 28-ந் தேதி அதிகாலை 12 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு அடுத்தநாள் இரவு 10.45 மணிக்கு லோக்மான்ய திலக் டெர்மினஸ் வந்து சேரும்.

இந்த ரெயில் இருமார்க்கத்திலும் கல்யாண், லோனவாலா, புனே, தவுன்ட், சோலாப்பூர், கலப்ரகி, வாடி, யாட்கிர், ராய்சுர், அதோனி, குன்டக்கல், கூட்டி, தாதிபத்திரி, ஏரகுண்டலா, கடப்பாடி, ரசாம்பெத், ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருபாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் நின்று செல்லும். இந்த தகவலை மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ளது.

மேலும் செய்திகள்