சிங்கம்புணரி அருகே கிருங்காக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை - கலெக்டர் ஜெயகாந்தன் அறிவிப்பு
சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை என்று கலெக்டர் ஜெயகாந்தன் கூறினார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சிங்கம்புணரி அருகே உள்ள கிருங்காக்கோட்டை கிராமத்தில் நாளை (ஞாயிற்றுக் கிழமை) ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தும் பகுதி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க முடியாது என்று சிங்கம்புணரி தாசில்தார் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழக அரசின் சார்பில் சில சட்டவிதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வருடத்தில் தொடங்கும் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டும் தான் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே நாளை கிருங்காக்கோட்டை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி ஏதும் வழங்கப்படவில்லை.
மேலும் அன்றைய தினம் தடையை மீறியும், அரசு அனுமதியின்றியும் சட்டத்திற்கு புறம்பாக ஜல்லிக்கட்டு நடத்தினால் கிராம ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் விழாக்குழுவினர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல் அன்றைய தினம் அந்த கிராமத்திற்கு காளைகளை கொண்டு வரும் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர், திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சிங்கம்புணரி தாசில்தார் ஆகியோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு ஜல்லிக்கட்டு நடக்காத வண்ணம் கண்காணித்து சட்டம்-ஒழுங்கை காக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கிராம மக்கள், ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்கள் பொதுமக்கள் நலன் கருதி இதில் கலந்து கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.