தர்மபுரி மாவட்டத்தில் வாகன விதிமீறல்கள் தொடர்பாக 415 வழக்குகள் பதிவு
தர்மபுரி மாவட்டத்தில் வாகன விதிமீறல்கள் தொடர்பாக 415 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் உத்தரவின்பேரில் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனையின்போது ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களில் செல்லுதல், உரிய ஆவணங்கள் இன்றி இருசக்கர வாகனங்களில் செல்லுதல், போக்குவரத்து விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக மாவட்டம் முழுவதும் 415 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் 350 வழக்குகள் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது போடப்பட்டவை என்பது குறிப்பிடப்பட்டது.