கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் நேரில் ஆய்வு

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகளை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Update: 2019-07-10 22:30 GMT
ராயக்கோட்டை, 

கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ராயக்கோட்டை ஊராட்சி, திம்ஜேப்பள்ளி ஊராட்சி, நாகமங்கலம் ஊராட்சி பகுதிகளில் நாகமங்கலம் ஊரக வளர்ச்சித்துறை அரசு பண்ணை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் நாகமங்கலம் ஏரி தூர்வாரப்பட உள்ளது. இதே போல சாமகவுண்டன் ஏரியில் தாய் திட்டத்தில் ரூ.22 லட்சத்து 72 ஆயிரம் மதிப்பில் ஏரி புனரமைக்கப்பட்டுள்ளது.

உள்ளுகுறுக்கை கிராம தொடக்கப்பள்ளி வளாகத்தில் பல வகை மரங்கள் நடப்பட உள்ளன. மேலும் கானாற்றின் குறுக்கே மழைநீர் சேமிப்பு குளம் அமைக்கப்பட்டு, மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட உள்ளன.

இந்த குடிநீர் திட்ட பணிகளை மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்புத்துறை துணை செயலாளர் மோகன் ரங்கநாதன், பொறியாளர் மாதவ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, உதவி பொறியாளர் குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, இந்துமதி, சரவணபவா, தமிழரசன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், பணி மேற்பார்வையாளர்கள் லட்சுமணன், கோமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்