வானவில் : ஆண்களின் அழகு சாதனம்
சிஸ்கா நிறுவனம் ஆண்களுக்கான அழகு சாதனப் பொருள் பிரிவில் ஹேர் டிரிம்மரை அறிமுகம் செய்துள்ளது.
மின்சாரம் சேமிக்கும் எல்.இ.டி. பல்புகள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் சிஸ்கா நிறுவனம் இப்போது முதல் முறையாக ஆண்களுக்கான அழகு சாதனப் பொருள் பிரிவில் ஹேர் டிரிம்மரை அறிமுகம் செய்துள்ளது. மிகவும் கையடக்கமாக வந்துள்ள இந்த டிரிம்மர் கொரிய தொழில்நுட்பத்தில் தயாரானதாகும். இதன் விலை ரூ.4 ஆயிரம். இதன் மூலம் 14 வகையான தலைமுடி, மீசை, தாடி உள்ளிட்டவற்றை அழகுபடுத்திக் கொள்ள முடியும். ‘ஹெச்.டி. 500கே புரோ ஸ்டைலிங் கிட்’ என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது. இதில் ராபிட் சார்ஜிங் தொழில்நுட்பம் உள்ளது.
தோலுக்கு எவ்வித எரிச்சலும் தராத வகையில் இதன் பிளேடு மிகச் சிறப்பாக செயல்படும். அதேபோல மிகச் சிறப்பாக டிரிம்மிங் செய்யவும் இது உதவும். பொதுவாக டிரிம்மரில் ஆன்ஆப் பொத்தான் மட்டுமே இருக்கும். ஆனால் இதில் எல்.இ.டி. டிஸ்பிளே உள்ளது.
இதன் மூலம் பேட்டரியின் சார்ஜ் அளவு, டிராவல் லாக் வசதி சார்ஜிங் இண்டிகேட்டர் ஆகியவற்றை அறிந்துகொள்ள முடியும். முன்னணி மின்னணு விற்பனையகங்களிலும், பிரபல ஆன்லைன் விற்பனையகங்களிலும் இது கிடைக்கும். இதில் 21 மி.மீ. அளவு முடியை வெட்டுவதற்கான வசதி, தலைமுடி டிரிம்மர் அதற்கேற்ற ஸ்டபுள் சீப்பு, மூக்கின் முடியை டிரிம் செய்யும் வசதி, பாயில் ஷேவர், பிரிசிசன் டிரிம்மர், பாடி குரூமர், ஐபுரோ டிரிம்மர் உள்ளிட்ட 14 விதமான பணிகளை இதன் மூலம் மேற்கொள்ள முடியும்.
இதில் உள்ள பிளேடு தானாகவே தன்னை கூர் செய்து கொள்ளும் தொழில்நுட்பத்திலானது. அதேசமயம் முகத்தில் மிருதுவான ஷேவிங்கிற்கு உதவும் வகையில் பத்திரமானது. இதன் வடிவமைப்பு பலகட்ட ஆராய்ச்சியின் இறுதியில் உருவாக்கப்பட்டது. இதில் கிளிக்புரோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இதில் உள்ள அட்டாச்மென்ட்கள் எளிதில் பொருந்திக் கொள்ளும். அதேசமயம் டிரிம்மர் பயன்பாட்டில் இருக்கும்போது இது உறுதியான பிடிப்புடன் செயல்படும். இதில் டிராவல் லாக் வசதி இருப்பதால், பெட்டியில் எடுத்துச் செல்லும்போது தவறுதலாக இயங்குவதற்கு வாய்ப்பே இருக்காது.