மாடியில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை பலி - சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்

நத்தத்தில் மாடியில் இருந்து தவறி விழுந்த ஆசிரியை பரிதாபமாக இறந்தார். சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர்.

Update: 2019-07-09 22:45 GMT
நத்தம்,

நத்தம் திருநகர் பகுதியில் வசித்து வருபவர் குமார் (வயது 40). கோழி இறைச்சி கடை வைத்துள்ளார். அவருடைய மனைவி சாரதா (34). இவர், அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று சாரதா வீட்டின் மாடிக்கு சென்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர், மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த சாரதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் நத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சாரதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சாரதாவின் உறவினர்கள் நத்தம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில் சாரதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதன்பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்