வீட்டை சுத்தமாக வைத்துவிட்டு ரோட்டில் குப்பையை கொட்டுகிறோம் மும்பை ஐகோர்ட்டு வேதனை

பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துவிட்டு ரோட்டில் குப்பையை கொட்டுகின்றனர் என மும்பை ஐகோர்ட்டு வேதனையுடன் கூறியுள்ளது.

Update: 2019-07-09 22:30 GMT
மும்பை, 

பொதுமக்கள் தங்கள் வீடுகளை சுத்தமாக வைத்துவிட்டு ரோட்டில் குப்பையை கொட்டுகின்றனர் என மும்பை ஐகோர்ட்டு வேதனையுடன் கூறியுள்ளது.

பொதுநலன் மனு

மும்பை ஐகோர்ட்டில் தென்மும்பை கிராபர்டு மார்க்கெட் பகுதியில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை குறித்து பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி பிரதீப் நந்திரஜோக் மற்றும் நீதிபதி நித்தின் ஜாம்தார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இதில், அரசு மற்றும் மாநகராட்சி தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பொதுநலன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

நீதிபதிகள் வேதனை

மேலும் பொதுநலன் மனு குறித்து நீதிபதிகள் கூறியதாவது:- தனிநபராக நாம் சுத்தமானவராக இருக்கி றோம். ஆனால் கூட்டமாக சேரும் போது அழுக்காகிவிடுறோம். குடிசைப்பகுதிகளில் வீடுகள் சுத்தமாக உள்ளன. ஆனால் வெளிப்பகுதி சகிக்க முடியாத அளவுக்கு உள்ளது. வசதியானவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளும் அதுபோல தான் உள்ளது. நாம் வீட்டை சுத்தமாக வைத்துவிட்டு, ரோட்டில் குப்பையை கொட்டுகிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் வேதனையுடன் கூறினர்.

மேலும் செய்திகள்