பள்ளி மாணவிகளை சொந்த ஊரில் இறக்கி விடாமல் அழைத்து சென்ற அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் மீது வழக்குப்பதிவு
பள்ளி மாணவிகளை சொந்த ஊரில் இறக்கி விடாமல் அழைத்து சென்ற அரசு பஸ் கண்டக்டர், டிரைவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. இதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாராபுரம்,
தாராபுரம் அருகே உள்ள மங்களாம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகள் பவானி (வயது 14), சேகர் என்பவரின் மகள் காயத்திரி (13) அதேபகுதியில் உள்ள புதூரைச் சேர்ந்த கார்மேகன் என்பவரின் மகள் கார்த்திகா (14), சாமிநாதன் என்பவரின் மகள் நந்தினி (14). இவர்கள் 4 பேரும் தாராபுரம், சர்ச்ரோட்டில் உள்ள புனித அலோசியஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் மணி இவரது மகள் கோகிலா (24). இவர் அதே பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.
இவர்கள் 5 பேரும் தினமும் பஸ்சில் பள்ளிக்கு வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல் 5 பேரும் பள்ளிக்கு வந்துவிட்டு, பள்ளி முடிந்ததும். மாலை தாராபுரம் தாலுகா அலுவலகம் எதிரே உள்ள பஸ் நிறுத்தத்திற்கு சென்றனர். பிறகு அந்த வழியாக வந்த பழனிக்குச் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்கள். அந்த பஸ் மங்களாம்பாளையம் பிரிவு அருகே சென்ற போது கண்டக்டரிடம் பஸ்சை நிறுத்துமாறு மாணவிகள் கூறியும் அதை அவர் கண்டுகொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது.
பின்னர் அந்த பஸ் 3 கிலோ மீட்டர் கடந்து தேர்பட்டி என்ற இடத்தில் நிறுத்தி அவர்களை இறங்குமாறு கண்டக்டர் ராம்நாத்தும், டிரைவர் சையது அபுதாகீரும் சேர்ந்து மிரட்டியதாக கூறப்படு கிறது. ஆனால் மாலை நேரமாகி விட்டது. நடந்து செல்வது சிரமம் என்று பஸ்சை விட்டு மாணவிகளும், ஆசிரியையும் இறங்கவில்லை. இதன் பின்னர் அவர்களை இறக்கி விட்டு அந்த பஸ் பழனி புறப்பட்டு சென்றது.
இதற்கிடையே மாணவிகளை சொந்த ஊரில் இறக்கி விடாத அரசு பஸ் கண்டக்டர், டிரைவரை கண்டித்து மங்களாம்பாளையம் பிரிவு அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இரவு மீண்டும் பழனியில் இருந்து அந்த ஊருக்கு அதே பஸ்சில் மாணவிகளும், ஆசிரியையும் திரும்பி வந்தனர். அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து நேற்று மங்களாம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் அரசு பஸ் டிரைவர் சையது அபுதாகீர் மற்றும் கண்டக்டர் ராம்நாத் ஆகியோர் மீது அலங்கியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் அரசு பஸ் டிரைவர் சையது அபுதாகீர் மற்றும் கண்டக்டர் ராம்நாத் மீது இருவேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் மங்களாம்பாளையம் பிரிவில் வேகத்தடை அமைக்க வேண்டும். இந்த வழியாக செல்லும் பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் அடங்கிய மனுவை சப்-கலெக்டர் பவன்குமாரிடம் கொடுத்தனர்.
மனுவை பெற்று கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இது தவிர மாணவிகளை மிரட்டிய கண்டக்டர், டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தாராபுரம் பஸ் பணிமனை கிளை மேலாளரிடம் புகார் மனு அளித்து உள்ளனர்.