ஈரோடு மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம்; கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது
ஈரோடு மாவட்டத்தில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் நடந்தது.
ஈரோடு,
நீர் ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணைச்செயலாளர் கல்யாணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி, ஜல் சக்தி அபியான் என்ற இயக்கத்தை தொடங்கி செயல்படுத்தி வருகிறார். இந்தியாவில் நீர் பற்றாக்குறை இருக்கக்கூடிய 255 மாவட்டங்களை நீர் வளமிக்க மாவட்டங்களாக மாற்றுவதற்காக மத்திய அரசில் இருந்து ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் 10 பேர் கொண்ட குழு அனுப்பப்பட்டு உள்ளது.
அதன்படி நாங்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த திட்டம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் சிக்கனத்தை வலியுறுத்துதல், பாரம்பரிய நீர்நிலைகள் மற்றும் நீர் ஆதாரங்களை புதுப்பித்தல், பயனற்ற ஆழ்துணை கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு, நீர்வடி மேலாண்மை திட்டத்தை முழுமையாக செயல்படுத்துதல் மற்றும் மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் ஆகிய 5 குறிக்கோள்களை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இதில், புதிய தடுப்பணைகள் கட்டுதல், குளம் மேம்பாடு செய்தல், நீர் உறிஞ்சி குழிகள் அமைத்தல் மற்றும் கசிவு நீர் குட்டைகள் அமைத்தல், நாற்றங்கால் அமைத்தல் மற்றும் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் மற்றும் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணைச்செயலாளர் கல்யாணி ஆகியோர் ஈரோடு கனிராவுத்தர் குளம், எல்லப்பாளையம் ஏரி, பங்காரு நகர் நீர்நிலை ஆகிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து கதிரம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நஞ்சனாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பு, மூலக்கரையில் கட்டப்பட்டு வரும் 3 கோடியே 16 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தடுப்பணை, சென்னிமலை முருங்கத்தொழுவில் அமைக்கப்பட்டுள்ள குளம் நீர் நிரப்பும் திட்டத்தினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுடன் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.