பங்களாப்புதூர் அருகே பவானி ஆற்றில் மணல் கடத்திய 4 பேர் கைது

பங்களாப்புதூர் அருகே பவானி ஆற்றில் மணல் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் லாரி-பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-07-09 22:30 GMT
டி.என்.பாளையம்,

பங்களாப்புதூர் போலீசாருக்கு நஞ்சைபுளியம்பட்டி பவானி ஆற்றில் மணல் கடத்துவதாக நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்றார்கள்.

அப்போது ஆற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் மணலை அள்ளி டிப்பர் லாரியில் 4 பேர் போட்டுக்கொண்டிருந்தார்கள். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

உடனே போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து பங்களாப்புதூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் ஏளூரை சேர்ந்த தனபால் (வயது 32), காளியூரை சேர்ந்த சசிக்குமார் (31), சிக்கரசம்பாளையத்தை சேர்ந்த அருண்குமார் (29), டி.ஜி.புதூரை சேர்ந்த பூபதி (32) என தெரியவந்தது. அதன்பின்னர் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய பொக்லைன் எந்திரம் மற்றும் டிப்பர் லாரி மணலுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்