ராமநாதாபுரத்தில் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-07-08 23:00 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் செயலாளர்களை அரசு பொது பணிநிலைத்திறன் அடிப்படையில் மாவட்ட அளவில் பணியிட மாற்றம் செய்ய அரசாணை வழங்கி உள்ளதை தடுத்து நிறுத்தக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலை மை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை தலைவர்கள் திருமால், கோபால், மாவட்ட இணை செயலாளர்கள் ரேவதி, சாமியாண்டி, மாவட்ட செய்தி தொடர்பாளர் பொற்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் பிற அலுவலக பணியாளர்களுக்கு பதவி உயர்வுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடும். எனவே செயலாளர்கள் பணியிட மாறுதல் உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

முடிவில் மாவட்ட பொருளாளர் குஞ்சரபாண்டியன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்