சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் திடீர் முற்றுகை; ஓய்வூதியம் வழங்கக்கோரி போராட்டம்
ஓய்வூதியம் வழங்கக்கோரி சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி, பவானிசாகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 750-க்கும் மேற்பட்டோர் பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ. பி.எல்.சுந்தரம் தலைமையில் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ஓய்வூதியம் வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு கொடுத்தோம். அந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டு 213 பேருக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு வழங்காமல் அதன்பின்னர் மனு கொடுத்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு உள்ளது’ என்றனர்.
பின்னர் அதிகாரிகள் கூறும்போது, ‘மீண்டும் உங்கள் மனுக்களை ஆய்வு செய்து தகுதியானவர்களை தேர்வு செய்து ஓய்வூதியம் வழங்குகிறோம்’ என்று அவர்களிடம் கூறினர். அதற்கு சில பெண்கள், ‘இன்று (அதாவது நேற்று)மாலைக்குள் எங்களுக்கு ஓய்வூதியம் கொடுப்பதாக உத்தரவு வழங்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை தொடர்வோம்’ என்று கூறி முற்றுகையை தொடர்ந்தனர்.
இந்த நிலையில் இதுபற்றி அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் கார்த்திக், போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் அங்கு சென்றனர். அவர்களிடம் தாசில்தார் கூறும்போது, ‘அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும்’ என்றார்.
இதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு மாலை 5.30 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.