கப்பல் கட்டும் நிறுவனத்தில் 366 பணியிடங்கள்
கப்பல் கட்டும் நிறுவனத்தில் ரிகர், எலக்ட்ரீசியன் பணிகளுக்கு 366 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டிப்ளமோ படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்று ‘மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’. கேரளாவில் செயல்படும் இந்த மத்திய அரசு நிறுவனத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் ரிகர் மற்றும் எலக்ட்ரீசியன் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 366 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ரிகர் பணிக்கு 217 இடங்களும், எலக்ட்ரீசியன் பணிக்கு 149 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வித்தகுதி
8-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ரிகர் என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் ரிகர் பணிக்கு வி்ண்ணப்பிக்கலாம். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் எலக்ட்ரீசியன் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 1-7-2019-ந் தேதியில் 18 வயது நிரம்பி, 38 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 செலுத்தி, இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 26-ந் தேதியாகும்.
இந்த பணிகளுக்கான ஆன்லைன் தேர்வு ஆகஸ்டு 31-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் mazagondock.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.