உளுந்தூர்பேட்டையில், மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்- ஐ.டி.ஐ. மாணவர் பலி

உளுந்தூர்பேட்டையில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதிய விபத்தில் ஐ.டி.ஐ. மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2019-07-05 22:30 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய மகன் வெங்கடேசன்(வயது 18). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஐ.டி.ஐ. யில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் வெங்கடேசன், ஐ.டி.ஐ.யில் உள்ள பெட்ரோல் பங்க்கில் தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு வெளியே வந்தார்.

அப்போது பெரம்பலூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று, வெங்கடேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தலைநசுங்கியதில் வெங்கடேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி, தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரித்தனர். பின்னர் விபத்தில் பலியான வெங்கடேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த வெங்கசேடன், பா.ம.க ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்