சங்க நிர்வாகி பணியிடை நீக்கத்தை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சங்க நிர்வாகி பணியிடை நீக்கத்தை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-07-04 22:45 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகம் மற்றும் தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள முதன்மை கல்வி அதிகாரி அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துமாறு சமூக வலை தளங்களில் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநில பொது செயலாளர் ரவிசந்திரன் சுட்டி காட்டியதாகவும், இதற்காக அவரை பணியிடை நீக்கம் செய்த பள்ளி கல்வி இயக்குனரகத்தை கண்டித்தும், மேலும் ரவிசந்திரனை மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோஷம்

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் வள்ளிவேலு தலைமை தாங்கினார். ராஜூ, ஜாண் இக்னேஷியஸ், வேலவன், நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்