திருச்சி விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 3 பேரிடம் விசாரணை
திருச்சி விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் 3 பேரிடம் விசாரணை.
செம்பட்டு,
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை தனியார் விமானம் ஒன்று திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை உதவி ஆணையர் பண்டாரம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட னர். அப்போது திருச்சியை சேர்ந்த வினோத் குமார், சரவணகுமார் மற்றும் ஜபருல்லா ஆகியோர் தங்கள் உடைமைகளில் 600 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.20 லட்சத்து 90 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.