அதிகரித்து வரும் திருட்டு, செயின் பறிப்பு சம்பவங்கள்; குற்றவாளிகளை பிடிக்க 3 சிறப்பு தனிப்படை அமைப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடு புகுந்து திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் குற்றவாளிகளை பிடிக்க 3 சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தலுக்கு பின்னர் கடந்த ஒரு மாதத்தில் வீடு புகுந்து திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுக்க சிறப்பு குற்றப்பிரிவை சேர்ந்த 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் அதனை செயல்படுத்திய விதம் குறித்து ஆராய்ந்து கடந்த காலங்களில் இதுபோன்று செயல்களில் ஈடுபட்டு கைதான நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 38 குற்றவாளிகளின் பட்டியல் தயார் செய்து தனிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த 38 குற்றவாளிகளின் தற்போதைய நிலை, சிறையில் உள்ளனரா?, எப்போது வெளியில் வந்தனர்?, அதன்பின்னர் வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் முக்கிய தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வீடு புகுந்து திருட்டு, வீட்டு வாசலில் படுத்திருப்பவர்களிடம் செயின் பறிப்பு என 15 சம்பவங்கள் நடந்துள்ளன. இதனை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பம் காரணமாக பொதுமக்கள் காற்றுக்காக வெளியில் படுக்கின்றனர். இவர்களை நோட்டமிட்டு மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
காற்றுக்காக வெளியில் படுப்பவர்கள் தங்க நகைகளை அணிந்து கொண்டு படுக்க வேண்டாம் என்பது போன்ற எச்சரிக்கை வாசகங்கள் அச்சடிக்கப்பட்டு கிராமங்கள் தோறும் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள கதவுகளின் உறுதித்தன்மையை சரிசெய்து கொள்ள வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை வங்கி பெட்டகத்தில் வைக்க வேண்டும். வீட்டிற்கு வரும் நபர்களை உறுதிசெய்த பின்னரே கதவை திறந்து அனுமதிக்கும் வகையில் கதவில் துளைஅமைத்து சங்கிலியால் கட்டி வைத்து கொள்ள வேண்டும். வீட்டில் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்திக்கொள்ள வேண்டும் என்பதுபோன்ற அறிவுரைகள் அடங்கிய விளம்பர பலகைகள் முக்கிய இடங்களில் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.