புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய கல்வி கொள்கையை ரத்து செய்யக்கோரி திருத்துறைப்பூண்டியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி,
காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஓ.என்.ஜி.சி. மற்றும் வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த டெல்டா மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர், பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டம்
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். புதிய கல்வி கொள்கையை கைவிட வேண்டும். கல்லூரிக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும். கஜா புயலில் சேதமடைந்த கல்லூரியை சீரமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் உறுப்பு கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்ட செயலாளர் சுர்ஜித் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்போம். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என கோஷங்கள் எழுப்பினர்.