முதியவரிடம் ஆன்லைனில் ரூ.66 ஆயிரம் அபேஸ் : ஆசாமிக்கு வலைவீச்சு
மும்பை ஜோகேஷ்வரி பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம் ஷேக் (வயது 59). இவரின் மனைவி ஆன்லைன் விற்பனை தளத்தில் பொருள் ஒன்றை விற்பனை செய்வது குறித்து பதிவேற்றம் செய்திருந்தார்.
மும்பை,
சம்பவத்தன்று இவரது மனைவியின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்பை இவரின் மகன் எடுத்தார். மறுமுனையில் பேசியவர் அந்த பொருளை வாங்க இருப்பதாக தெரிவித்தார்.
இதற்கான பணத்தை ஆன்லைனில் அனுப்புவதாக கூறி, அதற்கான செயலியை பதிவேற்றம் செய்யும்படியும் கூறினார்.
இதன்படி அந்த செயலியை பதிவேற்றம் செய்த போது பணம் வருவதற்கு மாறாக இவரின் கணக்கிலிருந்த பணம் ரூ.66 ஆயிரத்தை அந்த நபர் அபேஸ் செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் ஓஷிவாரா போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
அதன்போில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை அபேஸ் செய்த ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.