தண்டவாள பராமரிப்பு பணி, பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை கோட்டத்தில் ரெயில்வே தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி-மானாமதுரை பாசஞ்சர் ரெயில் (வ.எண் 76807) வருகிற 5-ந் தேதி, 9-ந் தேதி, 12-ந் தேதி, 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை மற்றும் 23-ந்தேதி, 26-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்சியில் இருந்து காலை 10.05 மணிக்கு பதிலாக காலை 10.55 மணிக்கு புறப்படும்.
இதே போல் அந்த ரெயில் வருகிற 6-ந் தேதி, 7-ந் தேதி, 13-ந் தேதி, 14-ந் தேதி, 20-ந் தேதி, 21-ந் தேதி, 27-ந் தேதி மற்றும் 28-ந் தேதி ஆகிய நாட்களில் இயக்கப்படாது.
காரைக்குடி-திருச்சி பாசஞ்சர் ரெயில் (வ.எண் 76840) வருகிற 6-ந் தேதி, 13-ந் தேதி, 20-ந் தேதி, 27-ந் தேதி ஆகிய நாட்களில் காரைக்குடியில் இருந்து காலை 9.40 மணிக்கு பதிலாக நண்பகல் 12.00 மணிக்கு புறப்படும்.
மதுரை-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில் (வ.எண். 56723) வருகிற 22-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மற்றும் 28-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை மண்டபம்-ராமேசுவரம் இடையே மட்டும் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரெயில் வருகிற 31-ந் தேதி வரை வியாழக்கிழமை தவிர பிற நாட்களில் திண்டுக்கல்-விருதுநகர் இடையே மட்டும் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில் நாளை (4-ந் தேதி) 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை, 10, 11, 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை, 17, 18, 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை, 24, 25, 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை மற்றும் 31-ந் தேதி ஆகிய நாட்களில் நெல்லை-திண்டுக்கல் ரெயில் நிலையங்களுக்கிடையே மட்டும் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
திருச்செந்தூர்-பாலக்காடு பாசஞ்சர் ரெயில் மதுரையிலிருந்து வருகிற 5-ந்தேதி, 9, 12, 16, 19, 23, 26-ந் தேதி மற்றும் 30-ந் தேதி ஆகிய நாட்களில் திருச்செந்தூரில் இருந்து மாலை 4.05 மணிக்கு பதிலாக மாலை 6.15 மணிக்கு புறப்படும். சென்னை-குருவாயூர், தூத்துக்குடி இணைப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127/16129) வருகிற 31-ந் தேதி வரை வியாழக்கிழமை தவிர பிற நாட்களில் சுமார் 1½ மணி நேரம் தாமதமாக தூத்துக்குடி சென்றடையும்.
மதுரை-பழனி பாசஞ்சர் (வண்டி எண். 56624) வருகிற 31-ந் தேதி வரை மதுரையிலிருந்து காலை 7.45 மணிக்கு பதிலாக காலை 7.15 மணிக்கு புறப்படும்.
நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரெயில் வருகிற 9-ந் தேதி வரை, 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 16, 17, 19, 21, 22, 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மற்றும் 30, 31-ந் தேதி ஆகிய நாட்களில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.
நெல்லை-மயிலாடுதுறை இணைப்பு பாசஞ்சர் ரெயில் (வ.எண். 56822/56821) வருகிற 9-ந்தேதி வரை, 11-ந் தேதி முதல் 14-ந்தேதி வரை, 16,17, 19, 21, 22, 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை மற்றும் 30, 31-ந் தேதி ஆகிய நாட்களில் திண்டுக்கல்-திருச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே மட்டும் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்படுகிறது.
மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில் (வ.எண் 56735) வருகிற 13-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை வியாழக்கிழமை தவிர பிற நாட்களில் விருதுநகர்-மதுரை இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு புறப்படும்.