அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.90¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை

அமாவாசையையொட்டி உழவர் சந்தைகளில் ரூ.90¼ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை ஆனது.

Update: 2019-07-02 21:46 GMT
சேலம்,

சேலம் மாவட்டத்தில் சூரமங்கலம், அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, தாதகாப்பட்டி, எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், ஆத்தூர், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வழக்கமான நாட்களை காட்டிலும் விசேஷ நாட்களில் அதிகப்படியான காய்கறிகள் விற்பனை செய்யப்படும்.

இந்தநிலையில் நேற்று அமாவாசையையொட்டி வழக்கத்தை விட காய்கறிகள் விற்பனை அதிகமாக நடைபெற்றது. காய்கறிகளை வாங்க அதிகமான நுகர்வோர்கள் வந்திருந்தனர். சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை ஆகிய உழவர் சந்தைகளில் 584 விவசாயிகள் தாங்கள் விளைவித்த, சுமார் 12 டன் காய்கறிகளை கொண்டு வந்தனர். இந்த காய்கறிகள் ரூ.47 லட்சத்து 2 ஆயிரத்து 515-க்கு விற்பனையாகி உள்ளது.

இதேபோல் ஆத்தூர், எடப்பாடி, இளம்பிள்ளை, மேட்டூர், ஜலகண்டாபுரம், தம்மம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய உழவர் சந்தைகளில் 533 விவசாயிகள், சுமார் 12 டன் காய்கறிகளை கொண்டு வந்தனர். இந்த காய்கறிகள் ரூ.43 லட்சத்து 28 ஆயிரத்து 545-க்கு விற்பனையாகி உள்ளது.

மாவட்டத்தில் உள்ள மொத்தம் 11 உழவர் சந்தைகளிலும் நேற்று ரூ.90 லட்சத்து 31 ஆயிரத்து 60-க்கு காய்கறிகள் விற்பனை ஆகி உள்ளது. 56 ஆயிரத்து 700 நுகர்வோர்கள் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கி சென்றுள்ளனர் என உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்