ஸ்டுடியோ ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் தொல்லையால் பரிதாபம்
கடன் தொல்லையால் ஸ்டுடியோ ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர், கன்னியாகுமரியில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பத்மா (36). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மணிகண்டன் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டனர். ஆனால் அவரால் அதை திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று மதியம் மணிகண்டன் சாப்பிட்டுவிட்டு அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது மனைவி அறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு மணிகண்டன் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிகண்டன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மணிகண்டன் கடன் தொல்லை தாங்கமுடியாமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பின்னர் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.