குமரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.9,600 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் தகவல்
குமரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் வங்கிகள் மூலம் ரூ.9,600 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
நடப்பு (2019-2020-ம்) நிதி ஆண்டுக்கான வங்கி கடன் வழங்கும் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி, திட்ட அறிக்கையை வெளியிட்டார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மேலாளர் கலைச்செல்வன் அதனை பெற்றுக்கொண்டார்.
இதில் ரிசர்வ் வங்கி அதிகாரி முத்துச்செல்வன், நபார்டு வங்கி அதிகாரி ஷைலேஷ் மற்றும் மாவட்ட வங்கி அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியதாவது:-
இந்த நிதியாண்டில் வங்கி கடன் கொடுக்கும் அளவாக ரூ.9,660.67 கோடி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் ரூ.6986.41 கோடி முன்னுரிமை கடன்களுக்கு ஒதுக்கப்பட்டது. அதனுள் விவசாய கடன்களுக்கு ரூ.5,305 கோடியும் (கடந்த ஆண்டை விட 5 சதவீதம் கூடுதல்) ஒதுக்கப்பட்டுள்ளது. கல்விக்கடன், வீடுகட்ட கடன், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.890 கோடியும், முன்னுரிமை அல்லாத கடன்களுக்கு ரூ.2674.26 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய நிதி ஆண்டில் குமரி மாவட்டத்தில் உள்ள வங்கிகள் அனைத்தும் சேர்ந்து ரூ.6,716.17 கோடி கடனாக கொடுத்துள்ளன. நடப்பு நிதி ஆண்டில் விவசாய கடன் அதிக அளவு கடன் கொடுக்கும்படி கேட்டு கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) மேலாளர் ராம்குமார் நன்றி கூறினார்.