பெரம்பலூர் மாவட்டம் வேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2019-07-02 22:45 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின் போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருந்த பொதுமக்களிடம், மருத்துவர்கள் தினந்தோறும் வந்து சிகிச்சையினை வழங்குகிறார்களா?, மருந்துகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றதா? என்று கேட்டறிந்த மாவட்ட கலெக்டர், மருத்துவர்களிடம் பொதுமக்களுக்்கு தேவையான மருந்துகள் இருப்பு உள்ளதா? என்றும், அடிப்படை வசதிகள் போதுமான வகையில் இருக்கிறதா? என்றும் கேட்டறிந்தார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். மருத்துவமனைகளுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு தேவையான இருக்கை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) சம்பத், வட்டார மருத்துவ அலுவலர் வசந்தா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்