திருவாரூர் அருகே கோவிலில் அம்மன் சிலைகள் உடைப்பு போலீசார் விசாரணை
திருவாரூர் அருகே கோவிலில் அம்மன் சிலைகள் உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள தொழுவனங்குடி கிராமத்தில் பெரியநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்ய திட்டமிடப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக பல்வேறு திருப்பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று திருப்பணிகள் மேற்கொள்வதற்காக ஸ்தபதிகள் கோவிலுக்கு வந்தனர். அப்போது கோவில் முகப்பில் இருந்த அம்மன் சிலைகளின் கைகள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் கோவில் மேல்புறத்தில் உள்ள கோபுரத்தில் இருந்த அம்மன் சிலைகளின் கைகள் உடைக்கப்பட்டிருந்தன.
இதேபோல் கோவில் கோபுரத்தை சுற்றியிருந்த சிங்க சிலைகளின் வால்களும் உடைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் 15 அம்மன் சிலைகள், 12 சிங்கம் சிலைகளின் வால்கள் உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவிலுக்கு வெளிப்புறத்திலும், கோபுரத்தில் இருந்த அம்மன் சிலைகளும், சிங்கம் சிலைகளின் வால் களையும் மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியது தெரிய வந்தது.
கோவில் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலம் போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கோவில் சிலைகள் உடைக்கப்பட்ட சம்பவம் கிராம மக்களிடையே மிகுந்த பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.