அமெரிக்க பல் மருத்துவக் கல்லூரியுடன் பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

அமெரிக்காவில் பல் மருத்துவக்கல்லூரியுடன் கல்வி செறிவூட்டல், ஆராய்ச்சி மற்றும் மாணவர்- பணியாளர் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

Update: 2019-07-01 23:39 GMT
பாகூர்,

புதுச்சேரி பிள்ளையார்குப்பத்தில் உள்ள ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழகத்தின் இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியுடன், அமெரிக்காவில் பல் மருத்துவக்கல்லூரியுடன் கல்வி செறிவூட்டல், ஆராய்ச்சி மற்றும் மாணவர்- பணியாளர் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக துணைவேந்தர் சுபா‌‌ஷ் சந்திர பரிஜா முன்னிலையில் அமெரிக்க பல் மருத்துவக்கல்லூரி பேராசிரியர் புரு‌‌ஷ் எ ஆண்டர்சன் மற்றும் பாலாஜி பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் மருத்துவ கல்லூரியின் கண்டுபிடிப்புகளுக்கு தனியார் நிறுவனத்துடன் காப்புரிமை தொழில்நுட்பம் பரிமாற்றம் பேராசிரியர் செந்தில் மூலமாக நடைபெற்றது.

மேலும் கல்லூரி முதல்வர் தலைமையில் கல்லூரியில் புகையிலை தடுப்பு மையம் தொடங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் சுகாதார திட்ட மைய தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ஸ்வாதி சரண், புதுச்சேரி அரசு தேசிய வாய்வழி சுகாதார மைய நோடல் அதிகாரி டாக்டர் கவிபிரியா, மாநில சட்ட ஆலோசகர் சூரியகுமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்