சென்னை வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந் தேதி சம்பளம் வழங்க மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து சென்னையில் நேற்று வேலைநிறுத்தம் நடந்தது.
நாகர்கோவில்,
தமிழக அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு மாதந்தோறும் 1-ந் தேதி சம்பளம் வழங்க மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து சென்னையில் நேற்று வேலைநிறுத்தம் நடந்தது. இதற்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவில் ராணித்தோட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை தலைமை தாங்கினார். பணியாளர் சங்க பொதுச்செயலாளர் சந்தானம், ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் தயானந்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ஸ்டீபன் ஜெயக்குமார் போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.