ஆசை வார்த்தை கூறி உல்லாசம்: கல்லூரி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது போக்சோ சட்டத்தில் மளிகை கடைக்காரர் கைது
ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக மளிகை கடைக்காரரை போக்சை சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
பாலக்கோடு,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஜக்கம்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிவசண்முகம் (வயது 28). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்த 19 வயது மாணவி தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சிவசண்முகமும், மாணவியும் உறவினர்கள் ஆவார்கள். இதனிடையே அவருக்கும், மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிவசண்முகமும், கல்லூரி மாணவியும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பெற்றோர், அவரை சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு பரிசோதனை செய்த போது மாணவி நிறைமாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதை கேட்டு மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வலி ஏற்பட்டதால் அங்கு மாணவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதுகுறித்து விசாரித்த போது மாணவியை, சிவசண்முகம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததால் கர்ப்பம் அடைந்ததும், இதை யாருக்கும் தெரியாமல் மாணவி மறைத்து வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசில் சிவசண்முகம் மீது புகார் செய்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து சிவசண்முகத்தை கைது செய்தார்.
கல்லூரி மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் மாரண்டஅள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.