மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கருணை அடிப்படையில் 10 பேருக்கு பணி நியமன ஆணை கலெக்டர் வழங்கினார்

திருவாரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கருணை அடிப்படையில் 10 பேருக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

Update: 2019-07-01 23:00 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் பட்டாமாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடக்கிய 347 மனுக்களை அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை எடு்க்க உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் 10 பேருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றுவதற்கான பணி நியமன ஆணையும், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில் அங்கன்வாடி பணியாளர்களான கமலி, கலைவாணி ஆகியோருக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கான மாநில விருது ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றி தழையும் கலெக்டர் வழங்கினார்.

பின்னர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பேருக்கு தலா ரூ.3 ஆயிரத்து 350 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு ரூ.1500 மதிப்பிலான காதொலி கருவி எந்திரமும் ஆக மொத்தம் 4 பேருக்கு ரூ.11 ஆயிரத்து 550 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி, துணை கலெக்டர்் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயதீபன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலா பூஷணகுமார் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்