மடிக்கணினி வழங்க வலியுறுத்தி கல்லூரி மாணவிகள் சாலை மறியல்
30-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் மடிக்கணினி தர வலியுறுத்தி, மதுராந்தகம் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகின்றது. அங்கு சென்ற ஆண்டு பிளஸ்-2 படித்த மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து தற்போது கல்லூரியில் பயின்று வரும் 50-க்கும் மேற்பட்ட மாணவிகள் நேற்று காலை தாங்கள் படித்த பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை என தெரிகிறது.
இதையடுத்து 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் மடிக்கணினி தர வலியுறுத்தி, மதுராந்தகம் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மதுராந்தகம் போலீசார் விரைந்து வந்து, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து, மாணவிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.