கூட்டுறவு வங்கி முன்பு பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
திருமருகல் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சமையல் செய்து சாப்பிட்டனர்.
திருமருகல்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 2017-18-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை 505 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 437 பேருக்கு பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது. இந்த தொகையை விரைவில் வழங்கி விடுவதாக கூட்டுறவு சங்க நிர்வாகத்தினர் தெரிவித்து இருந்தனர். ஆனால், விடுபட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், கூட்டுறவு கடன் சங்கம் முன்பாக நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுபட்டவர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும். விடுபட்டு போன 28 விவசாயிகளுக்கு 88 சதவீத தொகைக்கு பதில் குறைவான தொகை கணக்கிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் சமமாக காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து கூட்டுறவு வங்கி செயலாளர்(பொறுப்பு) அன்பழகன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கணக்குகளை முறைப்படுத்தி பயிர் காப்பீட்டு தொகையை விரைவில் வழங்குவதாக கூட்டுறவு வங்கி செயலாளர் தெரிவித்தார். இதனை விவசாயிகள் ஏற்காமல் தொடர்ந்து அலுவலக நுழைவு வாயில் முன்பு படுத்து காத்திருந்தனர்.
பின்னர் மாலை 4 மணி வரை உயர் அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால் கூட்டுறவு கடன் சங்க அலுவலகம் முன்பு சமையல் செய்து சாப்பிட்டனர்.
விவசாயிகளின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.