குலையன்கரிசல் பகுதியில் விவசாய நிலங்களில் எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிக்கக்கூடாது கலெக்டரிடம் கிராம மக்கள் வலியுறுத்தல்
குலையன்கரிசல் பகுதியில் விவசாய நிலங்களில் எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிக்கக்கூடாது என்று கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மனுக்கள் கொடுத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் முழு உருவ வெண்கல சிலை நிறுவ தூத்துக்குடி மாவட்ட அனைத்து நாடார் ஐக்கிய சங்கம் சார்பில் கடந்த 1994-ல் கோரிக்கை வைக்கப்பட்டு அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. சில காரணங்களால் சிலையை நிறுவ கால தாமதம் ஆகிவிட்டது. இப்போது சிலை நிறுவ இருப்பதால் அனுமதி தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாநகர குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தூத்துக்குடி நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பழைய பஸ் நிலையத்தை ரூ.300 கோடி செலவில் நவீன வசதிகள் உள்ள பஸ் நிலையமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இருந்த போது, நகரின் மையப்பகுதியில் உள்ள பஸ் நிலையத்தால் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை கணக்கில் கொண்டு, ஒருங்கிணைந்த பஸ் நிலையம் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி எதிரே அமைக்கப்படும் என்று கூறினார். ஆனால் அந்த திட்டம் கைவிடப்பட்டு ஏற்கனவே உள்ள இடத்தில் மீண்டும் அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட இருப்பது, நகரின் வளர்ச்சிக்கு முட்டுகட்டையாக இருக்கும். எனவே இந்த பஸ் நிலையத்தை மீன்வளக்கல்லூரி எதிரே அமைக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டம் உமரிக்கோட்டை முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் அசோக்குமார் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள பெரியக்குளத்தை தூர்வாரி சுமார் 40 ஆண்டுகள் ஆகின்றது. இந்த குளத்தை நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள். இந்த குளம் தூர்வாரும் பணி சில நபர்களின் பொய்யான தகவலால் நிறுத்தப்பட்டு உள்ளது. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த குளத்தை தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும்.
குலையன்கரிசல் பகுதியை சேர்ந்த பிரதிபா என்பவர் தலைமையில் பெண்கள் மற்றும் விவசாயிகள் பலர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் குலையன்கரிசல் கிராமத்தில் தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டின் வடகால் மூலம் பாசன வசதி பெற்று சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கரில் விவசாயிகள் நெல், வாழை, உளுந்து பயிர் செய்து வருகிறார்கள். தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு எரிவாயு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டு குழாய் பதிக்கப்பட உள்ளது. இதனால் விவசாய நிலம் பாதிக்கப்படும். எனவே குலையன்கரிசல் கிராம விவசாய நிலத்தில் எரிவாயு கொண்டு செல்ல குழாய் பதிக்கக்கூடாது. மாற்று இடத்தில் குழாய் பதிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், திருச்செந்தூர் தாலுகாவில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளில் மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் மாமுல் தர வேண்டும் என்று கடை பணியாளர்களிடம் நிர்பந்தித்து சிலர் மிரட்டி வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாயர்புரம் வர்த்தகர் சங்கம் சார்பில் தலைவர் நாகராஜன் தலைமையில் கொடுக்கப்பட்ட மனுவில், சாயர்புரம் பஜார் பகுதியில் இயங்கி வரும் மதுபான கடையை உடனடியாக அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தார்.
கீழஈராலை சேர்ந்த பொதுமக்கள் ஊர் நாட்டாண்மை சுப்புராஜ் தலைமையில் கொடுத்த மனுவில், கீழஈரால் பஞ்சாயத்து தலித் மக்கள் வாழும் குடியிருப்பு பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைந்து உள்ளது. இந்த சாலையில் 24 மணி நேரமும் வாகனங்கள் அதிகவேகமாக சென்று வருகின்றன. ஆனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு எவ்வித பாதுகாப்பு வசதியும் செய்யப்படவில்லை. எனவே விபத்துகளை தவிர்க்க கீழஈரால் பஸ் நிறுத்தத்தில் இருந்து மக்கள் வசிக்கும் பகுதி வரை சாலையில் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும். மக்கள் சாலையை கடந்து செல்ல சிறிய மேம்பாலம் அல்லது சுரங்கபாதை அமைத்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.
எப்போதும் வென்றான் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் மேலாண்மை குழு உறுப்பினர்கள் கொடுத்த மனுவில், எப்போதும் வென்றான் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் 225 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் உள்ள பழுதடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை. இதனால் இடிக்கப்படாத ஒரு பழுதடைந்த கட்டிடத்திலும், மரத்தடியிலும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். எனவே மாணவர்களின் நலன் கருதி வகுப்பறை கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கிதர்பிஸ்மி உள்ளிட்டவர்கள் கொடுத்த மனுவில், அண்ணா நகரை சேர்ந்த நிஷா என்பவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் காது குறித்த சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு இருந்தவர்கள் ஊசி போட்டு அவரின் உடல் உறுப்புகளை திருட முயன்றுள்ளனர். எனவே இதில் ஈடுபட்ட டாக்டர்கள், செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
ஸ்ரீவைகுண்டம் உச்சிமகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் காசி மனைவி ஈசுவரம் (வயது 72), அவருடைய சகோதரி சண்முகவடிவு (65). இவர்கள் நேற்று மண்எண்ணெய் கேனுடன் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க அனுமதித்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், சண்முகவடிவின் கணவர் கிருஷ்ணன் என்பவர் ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் முதல் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. ஆனால் இன்று வரை அவர் எந்தவிதமான பணமும் கொடுக்கவில்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.