ரூ.6 ஆயிரம் நிதியுதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ராஜாமணி தகவல்
மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை கலெக்டர் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை,
சிறு மற்றும் குறு விவசாயிகளின் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகளும் பயன்பெற தகுதி உள்ளவர்கள் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளின் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும். இது ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக் கில் செலுத்தப்படும். இந்த நிதியுதவி பெற அனைத்து சிறு, குறு நடுத்தர மற்றும் பெரிய விவசாயிகள் அனைவரும் தகுதி உடையவர்கள்.
நிறுவன நிலங்களின் உரிமையாளர்கள், முன்னாள் மற்றும் இன்னாள் அரசியல் அமைப்பு பதவி வகிப்பவர்கள், மத்திய -மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் அலுவலர்கள், மாதத்துக்கு ரூ.10 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள், வருமானவரி செலுத்தும் நபர்கள், அங்கீகரிக்கப்பட்ட தொழில் துறை அமைப்புகளில் பதிவு செய்து தொழில்களை மேற்கொள்பவர்கள் தவிர மற்ற அனைவரும் இந்த திட்டத்தில் சேர தகுதியானவர்கள். கோவை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி நடந்து வரு கிறது. எனவே தகுதியான விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்று பட்டா, ஆதார் எண், ரேஷன் கார்டு எண், வங்கி கணக்கு எண் மற்றும் செல்போன் எண் ஆகிய விவரங்களை அளித்து பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.