தென்பெண்ணை ஆற்றில் இருந்து மினிலாரியில் மணல் கடத்திய வாலிபர் கைது

தென்பெண்ணை ஆற்றில் இருந்து மினி லாரியில் மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-30 22:30 GMT
பாகூர், 

பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் குருவிநத்தம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தூக்குப்பாலம் அருகே போலீசார் சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்த லாரியில் ஆற்று மணல் இருந்தது் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து மினி லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் சின்னக்கரையாம்புத்தூரை சேர்ந்த பிரேம்குமார் (வயது 26) என்பதும் அவர் தென்பெண்ணை ஆற்றில் சித்தேரி அணைக்கட்டில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையைத் தொடர்ந்து டிரைவர் பிரேம்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்