வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பெண் மயில் மோதி செத்தது நவீன பெட்டிகள் இணைக்கப்பட்ட முதல் நாளில் சோகம்
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பெண் மயில் மோதி செத்தது. நவீன பெட்டிகள் இணைக்கப்பட்ட முதல் நாளில் இந்த சோகம் ஏற்பட்டது.
திருச்சி,
மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சென்னை சென்றதும் அங்கிருந்து காரைக்குடிக்கு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்கப்படுகிறது. வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் இணைக்கப்பட்டிருந்த பெட்டிகள் மாற்றப்பட்டு, புதியதாக நவீன பெட்டிகள் நேற்று முதல் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் புதுப்பொலிவு பெற்ற வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை வழக்கம் போல், மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. நவீன பெட்டியில் பயணிகள் புதுவித பயணத்தை அனுபவித்துக்கொண்டு வந்தனர்.
என்ஜினில் மோதி மயில் செத்தது
இந்தநிலையில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ரெயில் வந்து கொண்டிருந்த போது, திடீரென அந்த வழியாக பறந்து வந்த பெண் மயில் ஒன்று, என்ஜினில் மோதியது. மோதிய வேகத்தில் அந்த மயில் என்ஜினின் மேல் பகுதியில் உள்ள மின்சார இணைப்பு கம்பியில் சிக்கி செத்தது.
பின்னர், அந்த ரெயில், திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு நேற்று காலை 9.15 மணிக்கு வந்தடைந்தது. அப்போது ரெயில் நிலையத்தில் இருந்த ஊழியர்கள் என்ஜினில் மயில் சிக்கி செத்து கிடந்ததை பார்த்து, ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து மயிலின் உடலை எடுத்த பின்பு ரெயிலை இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
வனத்துறையினரிடம் ஒப்படைப்பு
மேலும் இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கும், வனத்துறையினருக்கும் ரெயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்து வரவழைத்தனர். என்ஜினின் மேல் பகுதி கம்பியில் செத்துக்கிடந்த மயிலை ரெயில்வே ஊழியர்கள் மீட்டு ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அதை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மயிலின் உடல் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தினால் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக காலை 9.45 மணி அளவில் சென்னை புறப்பட்டு சென்றது. நவீன ரக பெட்டிகள் இணைக்கப்பட்ட முதல் நாளில் ரெயிலில் மயில் மோதி செத்த சம்பவம் பயணிகளிடம் சோகத்தை ஏற்படுத்தியது.