ஆம்பூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் சாவு

ஆம்பூர் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-06-30 22:45 GMT
ஆம்பூர், 

ஓசூரை அடுத்த தேன்கனிக்கோட்டை பெத்தபெல்கொண்டா பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (வயது 47), கார் டிரைவர். இவர் வேலூர் சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு டீ குடிப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வாணியம்பாடியில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஜெய்சங்கர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர் அருகே ராஜக்கல் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (52). இவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பெரியாங்குப்பம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்