திருமக்கோட்டையில் 15 ஏக்கர் தைலமரங்கள் எரிந்து சாம்பல்

திருமக்கோட்டையில் 15 ஏக்கர் தைலமரங்கள் எரிந்து சாம்பலானது.

Update: 2019-06-30 22:30 GMT
திருமக்கோட்டை,

திருமக்கோட்டை தெற்குத்தெருவை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியன், சேகர், பாலசுப்பிரமணியன், ஜெயபால், கோவிந்தராஜ், லோகநாதன், கணேசன், ஆனந்தன், துரைராஜ். இவர்களுக்கு இதே பகுதியில் அருகருகே தை மர தோப்புகள் உள்ளன.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் இந்த தோப்புகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

புகை மண்டலம்

தீவிபத்து குறித்து தகவல் அறிந்த திருமக்கோட்டை மற்றும் முத்துப்பேட்டை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 15 ஏக்கரில் தைலமரங்கள் எரிந்து சாம்பலானது. மேலும், இந்த தோப்புகள் அருகே இருந்த பனை மரங்கள் மற்றும் வேறு மரங்களும் எரிந்தன. இந்த தீவிபத்தால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்