அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்க மாட்டோம் கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் எடியூரப்பா சொல்கிறார்
அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்க முயற்சிக்க மாட்டோம் என்றும், ஆனால் கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூருவில் உள்ள 3 தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் வாக்காளர் களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி விஜயநகரில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா தலைமை தாங்கினார்.
மத்திய மந்திரி சதானந்த கவுடா, எம்.பி.க்களான பி.சி.மோகன், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாநில தலைவர் எடியூரப்பா பேசியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் 22 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறி வந்தேன். ஆனால் என்னுடைய எதிர்பார்ப்பையும் மீறி 25 தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்பதற்காக மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர். மத்தியில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதுபோல, மாநிலத்திலும் பா.ஜனதா ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் விரும்பு கிறார்கள்.
கூட்டணி ஆட்சியில் மாநிலத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. கூட்டணி கட்சி தலைவர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அடிதடி சண்டையில் மட்டும் ஈடுபடவில்லை. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் வெளியேற தயாராக உள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பா.ஜனதாவுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபடமாட்டோம். அவர்களாக பா.ஜனதாவுக்கு வந்தால் சேர்த்து கொள்வோம்.
அவ்வாறு அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி ஆட்சியை கவிழ்த்தால், அதனை பா.ஜனதா வேடிக்கை பார்த்து கொண்டு இருக்காது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்து என்ன செய்ய வேண்டுமோ? அதனை செய்வோம். இந்த கூட்டணி ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம். கர்நாடக சட்டசபை தேர்தலில் 104 தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு பதிலாக, 115 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால், மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி இருந்திருக்கும். ஆனால் பா.ஜனதாவுக்கு முழு மெஜாரிட்டி கிடைக்காததால், கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.
கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து விதானசவுதாவில் இருந்து மந்திரிகள் யாரும் பணி செய்வதில்லை. வறட்சி பாதித்த பகுதிகளுக்கும் மந்திரிகள் செல்வதில்லை. மாநிலத்தில் ஒருபுறம் வறட்சி நிலவுகிறது. மழை போதிய அளவு பெய்யாத நிலையில் முதல்-மந்திரி குமாரசாமியின் வெளிநாட்டு பயணம் தேவையற்றதாகும். முதல்-மந்திரி குமாரசாமி கிராம தரிசனம் மேற்கொள்ளவோ, வெளிநாட்டு பயணத்தையோ எதிர்க்கவில்லை. ஆனால் மாநிலத்தில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கூறுகிறேன்.
முதல்-மந்திரி குமாரசாமியும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவும், வேலை செய்வது நாங்கள், ஓட்டு மட்டும் பா.ஜனதாவுக்கு போடுவதாக வாக்காளர்களை அவமானப்படுத்தி வருகிறார்கள். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டினார்கள். அப்படி இருந்தும் அவர்கள் திருந்தவில்லை.
கூட்டணி ஆட்சி அமைந்து 13 மாதங்கள் தான் ஆகிறது. அதற்குள் சட்டசபை தேர்தலை மீண்டும் சந்திப்பது குறித்து காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் தலைவர்கள் பேசி வருகிறார்கள். இந்த கூட்டணி ஆட்சி மீது அவர்களுக்கே நம்பிக்கை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.