‘பப்ஜி’ விளையாடுவதை கண்டித்ததால் ஆத்திரம் அண்ணனை கத்தரிக்கோலால் குத்தி கொன்ற சிறுவன்

பப்ஜி விளையாடுவதை கண்டித்த அண்ணனை சிறுவன் கத்தரிக்கோலால் குத்திக்கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் தானேயில் நடந்து உள்ளது.

Update: 2019-06-29 21:45 GMT
தானே,

தானே மாவட்டம் பிவண்டியை சேர்ந்த 15 வயது சிறுவன் பப்ஜி எனப்படும் ஆன்லைன் விளையாட் டுக்கு அடிமையாக இருந்து வந்தான். அவன் எந்த நேரமும் அந்த விளையாட்டை விளையாடி உள்ளான். இதற்காக அவன் தனது அண்ணன் முகமது சேக்கின் (வயது 19) செல்போனை எடுத்து விளையாடி வந்துள்ளான்.

இந்தநிலையில், நேற்று காலையும் சிறுவன் வழக்கம் போல அண்ணனின் செல்போனை எடுத்து பப்ஜி விளையாடி உள்ளான். இதை பார்த்து கோபமடைந்த முகமது சேக், தம்பியை கண்டித்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், அண்ணன் என்றும் பாராமல் முகமது சேக்கின் தலையை சுவற்றி மோத செய்தான். மேலும் அருகில் கிடந்த கத்தரிக்கோலை எடுத்து சரமாரியாக குத்தினான். இதில் படுகாயமடைந்த முகமது சேக் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பப்ஜி விளையாடுவதை கண்டித்த அண்ணனை சிறுவன் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்